காலநிலை மாற்றம்

நாட்டின் பலபாகங்களிலும் சீரற்ற காலநிலை காரணமாகப் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாகத் தொடரும் மழையுடன் கூடிய கால நிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் 1273 குடும்பங்களைச் சேர்ந்த 5119 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர்காயமடைந்துள்ளதாகவம் நேற்றைய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சீரற்ற கால நிலைகாரணமாக இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பதுளை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

347 வீடுகள் முழுமையாகவும், மூன்று வீடுகள் பாதியளவிலும் சேதமுற்றிருப்பதாகவும் நேற்றைய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தாழமுக்கப் பிரதேசம் இலங்கைக்கு மேலாக தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதாக, கொழும்பு வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி முஹம்மட் சாலிஹீன் தெரிவித்தார்.

இதனால் நாட்டின் பெரும்பலான பகுதிகளில் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யலாமெனவும், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும்,

அத்துடன், காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய மழை பெய்யலாமெனவும் ஏனைய பிரதேசங்களிலுள்ள சில இடங்களிலும் 100 மில்லிமீறற்ருக்குக் கூடிய மழை பெய்யும் சாத்தியமுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம்

ஏ.எல்.எம்.சலீம்