
posted 22nd November 2021
கண்டி, திகன கலவரத்தின் போது இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகி, முற்றாக சேதமடைந்து, புனரமைப்பு செய்யப்பட்ட திகன,கெங்கல்ல மஸ்ஜிதுல் லாபிர் ஜும்மா பள்ளிவாசலுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் விஜயம் செய்தார்.
இந்த விஜயத்தின் போது ஜமாஅத்தினரும் பொது பொது மக்களும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை வரவேற்று அளவலாவினர்.
இதன் போது பள்ளி வாசலை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் அங்கு இடம்பெற்ற விசேட துஆ பிராத்தனையிலும் கலந்து கொண்டார்.

ஏ.எல்.எம்.சலீம்