இலங்கையின் சீரற்ற கால நிலை ஏற்பட்ட அனர்த்தங்கள்

சீரற்ற கால நிலை காரணமாக இலங்கையில் 10 மாவட்டங்களில் 41 பிரதேச செயலக பிரிவுகளில் பாதிப்பு இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

1,444 குடும்பங்களைச் சேர்ந்த 5790 பேர் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அதன் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதத்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த அனர்த்தத்தினால் 4 உயிரிழப்புக்ளும் இடம்பெற்றுள்ளன. வெள்ளத்தில் சிக்கி 2 பேரும், மின்னல் தாக்கலுக்குள்ளாகி 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இதன் போது 03 வீடுகள் முழுமையாகவும், 409 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மேஜர் ஜெனரல் சுதத்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் சில தினங்களில் காலநிலையில் சிறிதளவு மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சீரற்ற கால நிலை ஏற்பட்ட அனர்த்தங்கள்

எஸ் தில்லைநாதன்