அமரர் சுப்பிரமணியம் சதானந்தன் அவர்களின் நினைவஞ்சலி

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா கஜதீபன் தலைமையில் மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் திருமதி சதானந்தன் நினைவுச் சுடரினை ஏற்றி வைத்தார்.

புனொட் அமைப்பின் தலைவர் த சித்தார்த்தன் பா உ , ஆனந்தி அண்ணரின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்தார். தொடர்ந்து கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் தோழர் குரு, வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், தமிழ் தேசியக்கட்சியின் செயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் சுகு சிறீதரன் ஆகியோர் நினைவு உரை நிகழ்த்தினார்கள்.

நிகழ்வில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், உறுப்பினர்கள், கட்சியின் நகரசபை பிரதேச சபை தவிசாளர்கள், அங்கத்தவர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், தோழர் ஆனந்தி அண்ணரின் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அமரர் சுப்பிரமணியம் சதானந்தன் அவர்களின் நினைவஞ்சலி

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House