
posted 13th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வெளிநாட்டு மோகம்காட்டித் தொடரும் பணம் மோசடி
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரொருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
ஒன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து பொதுஜன பெரமுனவின் தீவக அமைப்பாளர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரிடம் யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)