
posted 9th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
விவசாயின் பயிர்களை அழித்த யானைகள்
முல்லைத்தீவு - விசுவமடு மேட்டுப்பட்டித்தெரு கிராமத்தில் விவசாயி ஒருவரின் பயிர்களை யானைகள் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (08) நள்ளிரவு வேளை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 03 யானைகள் தமது தோட்டத்தில் உட்புகுந்து அறுவடை செய்யும் தருவாயில் இருந்த வத்தகப்பழங்கள் மற்றும் 100ற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் என்பனவற்றை சேதமாக்கியுள்ளதென கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த கிராமத்தில் நீண்டகாலமாக யானைகள் தமது வாழ்வாதாரங்களை அழித்து வருவதாகவும் யானை வேலிகள் போடப்படும் வேலைகள் பூர்த்தியாகாத நிலையில் உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைந்து தமது பிரச்சனைக்கு தீர்வு பெற்று தருமாறு விவசாயிகள் கேட்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)