
posted 2nd May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வவுனியாவில் அரசுக்கு எதிரான கோஷங்களுடன் மார்க்சிச லெனினிச கட்சி ஊர்வலம்
'உழைக்கும் மக்கள் ஒன்றிணைவோம்; நாட்டின் வளங்களை பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சியின் மே தின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நேற்று புதன்கிழமை 1ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்பாக ஆரம்பமான இந்த ஊர்வலம் பஜார் வீதி ஊடாக வவுனியா நகர மண்டபத்தை அடைந்தது. அதன் பின்னர் அங்கு பிரதான மே தினக் கூட்டம் இடம்பெற்றது.
இந்தப் பேரணியில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)