
posted 30th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வதிரி பூவற்கரைப் பிள்ளையார் ஆலய மணவாலக்கோல உற்சவம்
வடமராட்சிவதிரி பூவற்கரைப் பிள்ளையார் ஆலய மணவாலக் கோல உற்சவ 1008சங்காபிசேகம் இன்று புதன்கிழமை காலை 6:00. ஆரம்பமாகி விநாயக வழிபாடு புண்ணியவாசனம் விசேடதிரவியகோமம் தீபாரதனை வேததோத்திர திருமுறை பாராணயம் ஆசிர்வாதம் கும்பபிரதட்சணம் என்பன இடம்பெற்றதனை தொடர்ந்து காலை 11:00 மணியளவில் விசேட அபிசேகம் இடம் பெற்று வசந்த மண்டப பூசைகள் இடம் பெற்றன.
அதனை தொடர்ந்து சுவாமி உள்வீதி உலா வந்தார். தொடர்ந்து பூவற்க்கரை பிள்ளையார் கிராம வலம் சென்றார்,
இம்மணவாளக்கோல உற்சவம் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ குகோகுலன் குருக்கள் தலமையில் இடம் பெற்றது. இம் மணவாளக்கோல உற்சவத்தில் பிரதேசத்தை சேர்ந்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)