
posted 18th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால்
தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் சனிக்கிழமை (18) உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. அந்தவகையில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வானது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியில் நடைபெற்றது.
இதன்போது பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதன் பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)