
posted 13th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ்ப்பாண கச்சேரியின் வரலாறு
ஊடகவியலாளர் ந. பரமேஸ்வரன் எழுதிய யாழ்ப்பாண கச்சேரியின் வரலாறு, கணேச ஐயர் சௌந்தராஜனின் யாழ்ப்பாணத் தமிழியல் ஆய்வடங்கல் தேர்ந்த நூல் விபரப் பட்டியல் நூல்களின் வெளியீட்டு விழா வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் கடந்த வெள்ளிக்கிழமை (10) யாழ்ப்பாணம் செம்மணியில் அமைந்துள்ள மாகாண கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டது.
கணேச ஐயர் சௌந்தராஜனின் "யாழ்ப்பாணத் தமிழியல் ஆய்வடங்கல் - தேர்ந்த நூல் விபரப் பட்டியல்", ஊடகவியலாளர் ந. பரமேஸ்வரன் எழுதி உதயனில் தொடராக வெளி வந்த "யாழ்ப்பாண கச்சேரியின் வரலாறு" என்னும் இரு நூல்களின் வெளியீட்.டு நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு மாநாட்டு மண்டபத்தில் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு செயலாளர் பற்றிக் டிறஞ்சன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். நூல் மதிப்புரைகளை இந்து கற்கைகள் பீட் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.தி. செல்வமனோகரனும் வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளையும் வழங்கினார்கள். நூல் வெளியீட்டின் போது கல்வி அமைச்சின் செயலாளரால் நூலாசிரியர்கள் இருவரும் பென்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்கள். இந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன். பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர்கள் சிவலிங்கறாயா, ரகுராம், மாகாண கல்வி அமைச்சின் திணைக்கழ அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள், திணைக்களதலைவர்கள், நூலகர்கள் கலந்து கொண்டார்கள்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)