
posted 12th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
முஜிபுர் ரஹ்மான் நியமனம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படடதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
முஜிபுர் ரஹ்மான் வெள்ளி (10) பாராளுமன்றத்தில், சபாநாயகர் முன்னிலையில், புதிய பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து பதவி ஏற்றுக்கொண்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய முஜிபுர் ரஹ்மான் கடந்த 2023ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, அதில் கொழும்பு மாநகர சபைக்காகப் போட்டியிடும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்திருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)