
posted 23rd May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மாணவிகள் இருவருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது
முல்லைத்தீவு உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகளுக்கு தொண்டைமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தினால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.
மிக நீண்டதூரத்திலிருந்து பாடசாலைக்கு நடந்து வருவதனால் அதனை அவதானித்த பாடசாலை நிர்வாகம் துவிச்சக்கர வண்டிகளை குறித்த மாணவிகளுக்கு வழங்கிவைக்குமாறு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகளிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்று முன்தினம் 21/05/2024 துவிச்சக்கர வண்டிகள் மாணவிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த இரண்டு துவிச்சக்கர வண்டிகளையும் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகன் சுவாமிகள், கிளிநொச்சி சின்மியா மிஷன் சுவாமிகள் தமது தொண்டர்களுடன் சென்று வழங்கிவைத்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)