
posted 8th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மாணவர்களுக்கு சைக்கிள் அன்பளிப்பு

உதவி தேவைப்படும் 200 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு திருகோணாமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலகத்தின் சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை சிறுவர் அபிவிருத்தி நிதியத்துக்கு ஜப்பான் சிறுவர் நிதியத்தால் வழங்கப்பட்ட சைக்கிள்கள் மூன்று பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த 200 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
சிறுவர் நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அரியரட்ணம் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட செயலாளர், மாவட்ட செயலக ஊழியர்கள், மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள், திருகோணமலை வடக்கு கல்வி வலய அதிகாரிகள், அதிபர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)