
posted 14th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மனிதன் - யானைகள் மோதல் ஆதிவாசிகளுக்கு விழிப்புணர்வு
மனிதன் - காட்டு யானை மோதலில் இருந்து ஆதிவாசி சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை ஹெல்ப் சிறீ லங்கா அமைப்பு அம்பாறையில் நடத்தியுள்ளது.
மாதுறு ஓயா தேசிய பூங்காவில் சுமார் 350 முதல் 400 யானைகள் உள்ளன. மாதுறு ஓயா பெரிய குளத்தில் நன்னீரின் பெரும் பகுதி யானைகள் நீர் அருந்த ஒதுக்கப்பட்டுள்ளது.
மகாவலி சி பிரதான திட்ட வரைபில் வரையறுக்கப்பட்ட யானை வழித்தடங்களில் திசை மாறி வழியை இழந்த யானைகள் அடிக்கடி அருகில் உள்ள வஸ்கமுவ தேசிய பூங்காவுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
யானைகள் சுதந்திரமாக திரியும் எலெகொடலீய வழித்தடம் இப்போது மனித வாழ்விடங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது .
இந்தப் பகுதிகளில் உள்ள கிராமங்கள் அடிக்கடி மனித யானை மோதலுக்கு உள்ளாகின்றன. இவ்வாறாக இந்தப் பிரதேசத்தில் சூரியபொகுண (தெஹியத்தகண்டிய) என்ற கிராமத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்து.
இந்த நிகழ்வில் இலங்கை ஆதிவாசிகள் சங்கத் தலைவர் விஸ்வகீர்த்தி சிறீ வனஸ்பதி உறுவாரிகே வன்னில அத்தோவும் பங்கேற்றிருந்தார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)