
posted 3rd May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மண்டைதீவில் கண்டல் தாவரங்கள் தொடர்பில் ஆய்வு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் (Mr. Erik Solheim) அவர்களும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும் யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதிக்கு நேற்று முன்தினம் (01/05/2024) கள விஜயத்தில் ஈடுபட்டனர்.
கண்டல் தாவரங்களினால் இயற்கையாக அமைந்த நன்மைகள் பற்றியும், மண்டைதீவில் கண்டல் தாவரங்களின் பரம்பல் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
வெள்ள அனர்த்தத்தை தவிர்க்கவும், நீர்வாழ் உயிரினங்களின் பெருக்கத்தை அதிகரிக்கவும் இப்பிரதேசத்தில் வளரும் கண்டல் தாவரங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தவகையில் அவ்வாறான பங்களிப்பை அதிகரிக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இதன்போது ஆராயப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)