
posted 11th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
பொலிஸாரால் விரட்டப்பட்டவர் மின்கம்பத்துடன் மோதுண்டு பலி
வழிமறித்தும் நிற்காமல் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவரை பொலிஸார் விரட்டிச் சென்றபோது மின்கம்பத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று (10) வெள்ளிக்கிழமை இரவு புன்னாலைக்கட்டுவன் பிள்ளையார் கோயிலுக்கு அண்மையாக இடம்பெற்ற இந்த விபத்தில் கோப்பாய் தெற்கை சேர்ந்த பிரதீபன் (வயது 41) என்பவரே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
புன்னாலைக்கட்டுவனில் போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வந்தவரை வழிமறித்துள்ளனர். ஆனால், அவர் பொலிஸாரின் கட்டளையை மீறி மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்திச் சென்றுள்ளார்.
இதையடுத்து, பொலிஸார் குறித்த நபரை விரட்டிச் சென்றுள்ளனர். அப்போது வேகமாக சென்றவர் மின்கம்பத்துடன் மோதுண்டு உயிரிழந்தார்.
இந்த விபத்தையடுத்து அங்கு கூடிய பொதுமக்களால் அந்தப் பகுதியில் சில மணிநேரம் பதற்றம் நிலவியது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)