
posted 13th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பாலை மரக் குற்றிகள் கடத்தல் - பொலிசாரை மிரட்டிய சாரதி
சாவகச்சேரி - சரசாலைப் பகுதியில் மண்ணுக்குள் வைத்து சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகள் நேற்று 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி பொலிஸாரால் மீட்கப்பட்டன.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய மூத்த பொலிஸ் பரிசோதகர் செனவிரத்ன தலைமையில் நேற்று காலை இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
டிப்பரில் இந்த கடத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது பொலிஸார் சுற்றிவளைப்பு மேற்கொண்டனர். இந்நிலையில் பொலிசாரை மிரட்டி விட்டு டிப்பர் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.
மீட்கப்பட்ட மரக் குற்றிகளுடன் டிப்பர், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)