பாலிதவின் தேர்தல் குண்டு

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பாலிதவின் தேர்தல் குண்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவை தலைவராகக் கொண்ட ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் நாயகம் பாலிதரங்கே பண்டாரவினால் போடப்பட்ட “தேர்தல் குண்டு” ஒன்று நாட்டின் பல்வேறு தரப்பினரிடையேயும் எதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வருடம் தேர்தலொன்று வருமொன மக்கள் மத்டதியில் நம்பிக்கை ஊட்டப்பட்ட நிலையில், ஜனாதிபதித் தேர்தலா? பொதுத் தேர்தலா முதலில் வருமென்ற சர்ச்சையும் கிளப்பப்பட்டு, தேர்தல்பற்றிய சூடும் ஏறிய நிலையில் நாடுள்ளது.

இந்த தேர்தல் ஜுரம் ஏறியுள்ள நிலையில் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் போட்டுள்ள தேர்தல் குண்டு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என இரு தேர்தல்களும் இரு வருடத்திற்கு வேண்டாம் எனவும், பாராளுமன்றத்தில் யோசனையை முன்வைத்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டுமெனவும் செயலாளர் நாயகம் பாலிதரங்கே பண்டார கருத்து வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரநிலைக்கு கொண்டுவரும் நோக்கில் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தை இரண்டு வருடங்களுக்காவது நீடித்துக் கொடுக்க வேண்டுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளர் நாயகம் ரங்கே பண்டார மேலும் கருத்து வெளியிட்டுள்ளார். இந்தக்கருத்தை ஆளும் பொதுஜன பெரமுன உட்பட எதிர்க்கட்சி மற்றும் பல கட்சிகளும் எதிர்த்துள்ளன.

மீண்டும் ஒருமுறை நாட்டில் பாரிய எதிர் போராட்டங்கள் வெடிக்குமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலையும், பாராளுமன்றத் தேர்தலையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க அல்லது பதவிக் காலத்தை நீடிக்கப் பிரேரணைகள் கொண்டு வரப்பட்டால் அந்தப் பிரேரணைகளை நிச்சயமாகத் தோற்கடிப்போம் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் தெரிவித்துள்ளது.

செயலாளர் பாலிதவின் கருத்துக்கு எதிராக சிவில் அமைப்புக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அதேவேளை அவரது கருத்து வாபஸ்பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதுடன் பிரதமரும் தேர்தல்கள் கிரமமாக நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கு அமைவாக இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டே ஆக வேண்டும்.

பாலிதவின் தேர்தல் குண்டு

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)