பன்முக ஆளுமை மறைந்தார்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பன்முக ஆளுமை மறைந்தார்

பன்முக ஆளுமை மறைந்தார்

மருதமுனையைச் சேர்ந்தவுரும், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளருமான உமர்மௌலானா அவர்கள் திடீர் சுகயீன முற்று, கல்முனை ஆதார வைத்தியசாலையில் நேற்று (வெள்ளி) காலமானார்.

கல்வி மானாய், மருத்துவராய், எழுத்தாளராய், பன்முக ஆளுமை கொண்டவராக விளங்கிய உமர் மௌலானா, “வாழ்வியற்கலைகள்” எனும் நூலை விரைவில் வெளியிடவிருந்தார்.

1984இல் ஆசிரியராக நியமனம் பெற்ற உமர் மௌலானா அதிபராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் சேவையாற்றிவந்தார்.
2007இல் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட அவர் மருதமுனை அல் - மனார் மத்திய கல்லூரியின் அதிபராகவும், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளராகவும் அளப்பரிய சேவையாற்றினார்.

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பணிமனையின் ஒன்பதாவது பணிப்பாளராக 20.01.2023இல் சேவையில் இணைந்து இன்றுவரை பணியாற்றிவந்த அவர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 60 வயதில் ஓய்வுபெறவுமிருந்தார்.

அன்னாரது மறைவு தொடர்பில் கல்வி மற்றும் பல்துறைசார்ந்தோரும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து வரும் நிலையில் கல்முனைப் பிராந்தியமே அவரது இழப்பால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

பன்முக ஆளுமை மறைந்தார்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)