
posted 20th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நெடுந்தீவுக்கு 24 மணி நேரம் மின்சாரம் கிடைக்கவுள்ளது
நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணிநேர மின்சார வழங்கலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் நேற்றுமுன்தினத்துடன் சனிக்கிழமையுடன் (18) பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
நெடுந்தீவுக்கு வழங்கப்பட்ட புதிய மின்பிறப்பாக்கி நேற்று முன்தினம் முதல் சேவையில் இணைக்கப்பட்டது. இதையடுத்தே 24 மணி நேரம் மின்சாரம் வழங்கல் நெடுந்தீவில் தொடங்கப்பட்டுள்ளது.
முன்னர், மின்பிறப்பாக்கிகள் அடிக்கடி பழுதடைவதால் நெடுந்தீவில் 24 மணி நேர மின்சாரம் வழங்கல் சாத்தியமற்றிருந்தது. இது தொடர்பில் பொதுமக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து, நெடுந்தீவுக்கு புதிய மின்பிறப்பாக்கி கொண்டு செல்லப்பட்டது.
இது நேற்று முன்தினம் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கும் சேவையில் இணைக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்