
posted 14th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தின விழா
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.பீ. அப்துல் வாஜித் அவர்களின் தலைமையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வுகள் பதில் தாதிய பரிபாலகி திருமதி எம்.சீ.எஸ். சமாயிலா அவர்களின் ஒருங்கிணைப்பில் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் தாதியர் கழகத்தினால் (Nurses Club) ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட வைத்தியசாலையின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
மேற்படி நிகழ்வில் வைத்தியசாலையின் அனைத்துத் தாதிய உத்தியோகத்தர்களினதும் சேவைகளைப் பாராட்டி வைத்திய அத்தியட்சகரினால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேற்படி தாதியர் தினத்தையொட்டி வைத்தியசாலையின் ஆரோக்கிய வாழ்வு நிலையத்தினால் தொற்றா நோய்கள் சம்பந்தமாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)