
posted 19th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நந்திக்கடலில் அஞ்சலி
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்த வகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று (18) சனிக்கிழமை நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த அஞ்சலி நிகழ்வுகளில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ. ஜெகதீசன், சமூகசெயற்பாட்டாளர் அ. பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)