
posted 4th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தொழுநோய் கள விஜயம்
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் வெட்டு வாய்க்கால் பகுதியில் தொழுநோய் கள ஆய்வு நடத்தப்பட்டது.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தலைமையிலான சுகாதார குழுவினர் அப்பகுதியில் வீடு வீடாக விஜயம் செய்து ஆய்வு செய்தனர்.
இதில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தொழுநோய் கட்டுப்பாட்டு கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது ஏலவே இனங்காணப்பட்ட நான்கு தொழுநோயாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கையும் ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் உரிய சிகிச்சை பெறாமல் இருந்து வந்தமை அவதானிக்கப்பட்டது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)