
posted 20th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழ் பொது வேட்பாளர் விவகாரம்
தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் அவசரமாக முடிவு எடுப்பதில்லை. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே இது தொடர்பான இறுதி முடிவை எடுப்பது என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) வவுனியாவில் விருந்தினர் விடுதி ஒன்றில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில்கூடிப் பேசியது.
தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பாக சிவில் அமைப்புகள் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை அண்மையில் சந்தித்து பேசின இது தொடர்பான கட்சியின் முடிவை அவர்களுக்கு தெரிவிப்பதற்கு இரு வார கால அவகாசத்தை அவர் கோரியிருந்தார்.
இதைத் தொடர்ந்து தமிழ் பொது வேட்பாளர் மற்றும் கட்சியின் வழக்கு தொடர்பான விடயங்கள் குறித்துப் பேசுவதற்காக கட்சியின் மத்திய குழுவை நேற்றைய தினம் கூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு), தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் இரு வேறுபட்ட கருத்துகளை கொண்டுள்ளனர். இந்த நிலையிலேயே தமிழ் அரசுக் கட்சியிடம் தமிழ் சிவில் அமைப்புக்கள் ஆதரவைக் கோரியிருந்தன என்பதையும் நினைவில்கொள்ளத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)