
posted 8th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
செங்கலடியில் விபத்து ஐந்து பேர் படுகாயம்
பயணிகள் சேவையில் ஈடுபட்ட இ. போ. ச. பேருந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் ஐவர் படுகாங்களுக்கு உள்ளாகினர்.
கல்முனை - பொலநறுவை சேவையில் ஈடுபட்ட பேருந்தே பின்னிரவு 1.45 மணியளவில் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனையில் இருந்து மட்டக்களப்பு ஊடாக மகரகம நோக்கி பயணித்த போது செங்கலடி சிக்னல் சந்தியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி மின்பிறப்பாக்கியையும் சேதப்படுத்தி கடைத் தொகுதிக்குள் புகுந்தது.
இதில், சாரதி, நடத்துநர் உட்பட ஐவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)