
posted 1st June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சுமந்திரன் எம். பி. ரணிலின் முகவர் - கஜேந்திரன் எம். பி. சாடல்
பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தமிழ்த் தேசியத்தின் தேசவிரோதி. விடுதலைப் புலிகளை அடியோடு அழிக்க முயன்ற ரணிலின் முகவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்.
யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (29) நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் மேலும் கருத்துரைத்த அவர்,
“சுமந்திரன் அரசாங்கத்தை பாதுகாத்துச் செயல்படுபவர். இந்திய, மேற்குலக நாடுகளின் நலன்களின் அடிப்படையில் அந்தத் தரப்புகளுக்காக செயல்படும் இலங்கை அரசாங்கத்தின் முகவர். இப்போதும் அவர் அதையே செய்கின்றார். ஓர் அணியில் இருந்து கொண்டு பிரிந்து இருப்பதைப் போன்ற பல்வேறு அணுகுமுறைகளைக் கையாள்கின்றார்.
சர்வதே ரீதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் செயல்பாட்டாளர்களை கைது செய்து - எதிராகப் பல நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் ரணில். அதனாலேயே அந்த நேரத்தில் தேர்தலை புறக்கணிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்கவின் உண்மை முகத்தை மறைக்கவே விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை வாக்களிக்காமல் தடுத்தனர் என்று தேசவிரோதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எம். ஏ. சுமந்திரனும் பொய் பரப்புரை செய்கின்றனர். தமிழ் மக்கள், விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால் முள்ளிவாய்க்கால் மண் வரை சென்றிருக்க மாட்டார்கள் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)