
posted 8th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சம்புகளப்பு வீதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது
அட்டாளைச்சேனை - சம்புகளப்பு வீதிக்கு மின்சாரம் வழங்கும் வேலைத் திட்டம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம். ஐ. எம். பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எல். எம். அதாஉல்லஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்
அட்டாளைச்சேனை பிரதேச மக்களின் நீண்ட கால தேவையாகவிருந்து இந்த வீதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டமைக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)