
posted 22nd May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சந்நிதி - கதிர்காம பாதயாத்திரை
இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரையான சந்நிதி- கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி தலைமையிலான குழுவினர் 12 நாட்களின் பின்னர் இன்று வியாழக்கிழமை செம்மலையை அடையவுள்ளனர்.
வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இரு தினங்கள் தங்கியிருந்து சற்று ஓய்வெடுத்து பின்னர் மீண்டும் செவ்வாய்க்கிழமை யாத்திரையை ஆரம்பித்தார்கள்.
பாதயாத்திரைக் குழுவினர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமைமாமூலை யிலும்நேற்று புதன்கிழமை குமுழமுனையிலும் சென்று தங்கியிருந்தனர் .
நாளை வெள்ளிக்கிழமை குழுவினர் கொக்கிளாய் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் பிரவேசிக்க உள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரை யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமானது தெரிந்ததே.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)