
posted 3rd May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர் படகுகளுடன் கைது
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் 02.05.2024 அன்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒளி பாய்ச்சி குறுகிய கண்களை கொண்ட சுருக்குவலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டதால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வெற்றிலைக்கேணி கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் கட்டைக்காட்டை சேர்ந்தவர்கள் என்பதோடு உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)