
posted 28th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கிழக்கு மாகாணத்தை வந்தடைந்த செல்வச்சந்நிதி - கதிர்காமம் யாத்திரிகர்கள் குழு
செல்வச்சந்நிதி - கதிர்காமம் யாத்திரிகர்கள் குழு கிழக்கு மாகாணத்தை வந்தடைந்துள்ளது. யாத்திரிகர்கள் குழு வடக்கு மாகாணத்தின் கொக்கிளாயில் இருந்து கடல்நீரேரியை படகு மூலமாக கடந்து திருகோணமலையை அடைந்தனர். இவர்கள் 8 படகுகள் மூலம் கரையைக் கடந்தனர். பின்னர் அங்கிருந்து புல்மோட்டையை சென்றடைந்தனர்.
இலங்கையின் மிக நீண்ட தல யாத்திரையான செல்வச்சந்நிதி தொடக்கம் கதிர்காமம் வரையான தல யாத்திரை பல வருடங்களாக நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த 11ஆம் திகதி சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமானது. இது தற்போது கிழக்கு மாகாணத்தை சென்றடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)