
posted 20th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கிழக்கு ஆளுநர் தலைமையில் பல்வேறு உதவித் திட்டங்கள்
திருகோணமலையில் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.
திருகோணமலை துறைமுக உள்ளக வீதியில் புதிய நடை பாதை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
அத்துடன், பண உதவி தேவைப்படும் நோயாளர்களுக்கு உதவிகளும் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மேலதிக பயிற்சி நூல்களும் வழங்கப்பட்டன.
அத்துடன், நூலகங்களுக்கு, நூல்கள் வழங்கல், மாற்று ஆற்றலுடையோருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கல், உள்ளூராட்சி சபைகளுக்கு உழவு இயந்திரங்கள் வழங்குதல் போன்றவையும் நடைபெற்றன.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)