
posted 2nd May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கிளிநொச்சியில் பேரெழுச்சியுடன் தமிழ் அரசின் மே தின கூட்டம்
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மே தினக் கூட்டம் தமிழ்த் தேசிய மே நாளாக நேற்று (01) கிளிநொச்சியில் கொண்டாடப்பட்டது.
கிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பமான ஊர்வலம் கிளிநொச்சி மத்திய கல்லூரியை சென்றடைந்தது.
இந்த மே தின பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன், தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்கள், யாழ். மாநாக முன்னாள் முதல்வர்களான இ. ஆனல்ட், வி. மணிவண்ணன் பொதுமக்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)