
posted 23rd May 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
கார் விபத்தில் சிறுமி பலி
வடமராட்சியில் இருந்து திருகோணமலைக்கு சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 6வயது சிறுமி பலியானதுடன் மூவர்காயமடைந்துள்ளனர்.
திருகோணமலை, ஈச்சிலம்பற்று வட்டன்பகுதியில் கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அல்வாய் வடக்கைச் திக்கத்தைச் சேர்ந்த 6 வயது நிரம்பிய சிறுமியே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.
அல்வாய் திக்கம் பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் மட்டக்களப்பு நோக்கி பயணித்த காரொன்று திருகோணமலை - ஈச்சலம்பற்று வட்டவன் பகுதியில் நேற்று (22) புதன் கிழமை வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி வித்துக்குள்ளாகியுள்ளதாக ஈச்சலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 6 வயதுடைய நிதர்சன் ஆதித்யா ஸ்தலத்தில் பலியானதாகவும், அவருடைய தம்பியாரான 4 வயதுடைய நிதர்சன் அதிரேஸ் காயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டதோடு கணவனும், மனைவியும் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளதாகவும் தெரீவிக்கப்படுகிது.
இவ் விபத்து சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)