
posted 29th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கனடா செல்லவிருந்த இளைஞர் விபத்தில் மரணம்
வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதுண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
சாவகச்சேரி - புத்தூர் வீதியில், மட்டுவில் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிறு இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், அதே இடத்தைச் சேர்ந்த 22 வயதான பி. பானுஜன் என்பவரே உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞர் புத்தூர் நோக்கி பயணித்தபோதே இந்த விபத்து இடம்பெற்றது.
இந்த இளைஞர் நேற்றைய (28) தினம் செவ்வாய் கனடா செல்லவிருந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மட்டுவில் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துத் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)