
posted 22nd May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கடும் மழையால் யாழில் 15 பேர் பாதிக்கப்பட்டனர்
தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் யாழ்ப்பாணத்தில் ஐந்து குடும்பங்களை சேர்ந்த 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாண மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி. என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை வரையான 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 80.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவானது என்றும் தெரிவிக்கப்பட்டது.
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 4 பேர் பாதிக்கப்பட்டனர். அத்துடன், வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது. வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒருவர் பாதிக்கப்பட்டார். அத்துடன், வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது.
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஜே/232 கிராம அலுவலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டனர். வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்தது.
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் ஜே/166 கிராம அலுவலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டனர். வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே/263 கிராம அலுவலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டனர். வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)