
posted 13th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கடமைப்படி துண்டிக்கப்பட்ட மின்சாரம் மனிதாபிமானத்தால் மீண்டும் இணைக்கப்பட்டது
யாழ்ப்பாணம் தீவகப் பகுதிக்கு உட்பட்ட ஊர்காவற்துறை பாடசாலை ஒன்றில் ஏழு மாதங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில் வடமாகாண பிரதம செயலாளரின் தலையீட்டினால் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பாடசாலையில் மின்சார இணைப்புக்கான பட்டியல் நிலுவைத் தொகை வலக் கல்வி பணிமனையினால் செலுத்தப்படாத நிலையில் குறித்த பாடசாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மீளப் பெறுவதற்கு தண்டப் பணமாக சுமார் 3000 ரூபாய் வரை செலுத்த வேண்டும்.
குறித்த பணத்தை வலயம் செலுத்தினால் கணக்காய்வுத் திணைக்களத்துக்கு காரணம் கூற வேண்டி வரும் என்ற காரணத்தினால் குறித்த பணத்தை கட்டாத காலம் கடத்தி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களிலும் மற்றும் இணையதளங்களிலும் பிரதான விடயமாக செய்திகள் வெளியிடப்பட்ட நிலையில் வடமாகாண பிரதமர் செயலாளர் இ. இளங்கோவன் எடுத்த துரித நடவடிக்கையினால் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்ட பணிபுரையின் காரணமாக குறித்த பாடசாலைக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)