
posted 12th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
உறவுகளின் துயர் பகிர்வு
சமீபத்தில் வெப்பநிலை அதிகரித்ததை கருத்தில் கொண்டு முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
பொதுமக்களின் வசதியான பயணத்திற்காக உள்ளூர் சேவைக்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளுக்கு போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களும் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு ஆளுநரின் இந்த நடவடிக்கை குறித்து பொது மக்கள் பெரும்பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)