
posted 9th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அரச ஓய்வூதியர்களை அவரவர் வீட்டில் கௌரவப்படுத்திய ஓய்வூதியர் நம்பிக்கை நிதியம்
அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதிய நிந்தவூர்க்கிளையினர் தமது உறுப்பினர்களான நான்கு அரச ஓய்வூதியர்களை அவர்களது வீடு தேடிச்சென்று கௌரவித்துள்ளனர்.
நிதிய நிந்தவூர்க்கிளையின் 21 ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டத்தின் ஓர் அங்கமாக இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
தற்சமயம் நடமாடமுடியாத நிலையிலிருக்கும், நிதியத்தின் நீண்டகால உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் சேவையாற்றிய மேற்படி நால்வருக்குமே கௌரவம் அளிக்கப்பட்டது.
இதன்படி ஓய்வு நிலை மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளரும், நிந்தவூர் நலன்புரிச்சங்கத் தலைவருமான எம்.எச்.யாகூப் ஹஸன், ஓய்வு நிலை நீதிமன்ற முதலியார் ஏ.எஸ்.இப்றாகீம், ஓய்வு நிலைவிரிவுரையாளர் ஏ.எல்.எம்.பஸீர், ஓய்வு நிலை அதிபர் கலாபூசணம், ஹாஜியானி எம்.செயினுலாப்தீன் ஆகிய நால்வருமே வீடுதேடிச் சென்று கௌரவிக்கப்பட்டனர்.
அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதிய நிந்தவூர்ப்பிரதேசக்கிளை சார்பில் தலைவர் ஏ.எல்.மஹ்றூப், செயலாளர் எம்.ஏ.அப்துல் அஸீஸ், உப தலைவர் எஸ்.அகமது உட்பட கிளை முக்கியஸ்த்தர்கள் மேற்படி நால்வரதும் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தியும், பரிசுப் பொருட்கள் வழங்கியும் கௌரவம் அளித்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)