அதிகாரிகளின் பழிவாங்கலை எதிர்த்து மன்னாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

அதிகாரிகளின் பழிவாங்கலை எதிர்த்து மன்னாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அதிகாரிகளின் பழிவாங்கலை எதிர்த்து மன்னாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் மாவட்ட சிறுபோக நெற்செய்கைக்கான புலவுகளை தெரிவு செய்வதில் அதிகாரிகளின் தனிப்பட்ட பழிவாங்கலை கண்டித்து நேற்று முன் தினம் திங்கட்கிழமை (13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

2024ஆம் ஆண்டுக்கான சிறுபோகச் செய்கைக்காக நெடுங்கண்டல் புலவை திறந்துவிடுமாறு கோரியும் அதிகாரிகளின் பழிவாங்கலை கண்டித்தும் மாந்தை மேற்கு விவசாயிகள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது விவசாயிகள் மன்னார் மாவட்ட செயலகத்தின் நுழைவாயிலை முற்றுகையிட்டு, 'அதிகாரிகளின் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்கு இடம்கொடுக்காதீர்கள்', 'திறந்துவிடு திறந்துவிடு நெடுங்கண்டல் புலவை திறந்துவிடு', 'கொல்லாதே கொல்லாதே விவசாயிகளை கொல்லாதே' என்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி நின்றனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாந்தை மேற்கு விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கையில்;

மன்னார் மாவட்டத்தில் சிறுபோகச் செய்கையிடப்பட்ட காலந்தொட்டு இன்று வரை ஒருபோதும் நெடுங்கண்டல் புலவு பூட்டப்படவில்லை.

1974ஆம் ஆண்டு நீர்த் தட்டுப்பாடு வந்தபோது காலபோகத்தில் செய்கையிடப்படும் 40 ஏக்கர்களுக்கு சிறுபோகத்தில் ஒரு ஏக்கர் என்ற தீர்மானத்தில் 40 : 1 என்ற விகிதசாரத்தில் விவசாயம் செய்யப்பட்டபோது சின்ன உடைப்பு துலுசின் கீழ் உள்ள புலவுகள் மாத்திரம் திறக்கப்பட்டன.

இதில் நெடுங்கண்டல் புலவு முதன்மையானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட நீர்த் தட்டுப்பாடு காரணமாக அனைத்துப் புலவுகளும் பூட்டப்பட்டு, மன்னார் மாவட்ட விவசாயிகளின் விதைநெல் தேவைக்காக நெடுங்கண்டல் புலவு மாத்திரம் திறந்து விவசாயம் செய்யப்பட்டது.

இம்முறை எமது நெடுங்கண்டல் புலவு பூட்டப்பட்டதற்கான காரணத்தை அறிய, எமது கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் தனிப்பட்ட முறையில் உரிய அதிகாரிகளைச் சந்தித்து வினவியபோது, 2023 ஆம் ஆண்டின் புலவு பங்கீட்டில் தனிப்பட்ட நபர் ஒருவருடனான முரண்பாட்டுக்கு பழி தீர்க்கும் வகையில் இம்முறை எமது புலவு பூட்டப்பட்டுள்ளது என்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொண்டுள்ளோம்.

இந்த விடயத்துக்காக நாம் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மன்னிப்புக் கோரினோம். உரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து மிகத் தெளிவாக விளக்கியிருந்தோம். சாதக பாதக நிலையை தெளிவுபடுத்தி எமது புலவை திறந்துவிடும்படி பணிவாக வேண்டினோம்.

எனினும், ஏழை விவசாயிகளான நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம். இதன் அடிப்படையிலேயே எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு மாவட்டச் செயலகத்துக்கு முன் ஒன்றுகூடி போராட்டத்தை முன்னெடுத்தோம்.

2024ஆம் ஆண்டுக்கான சிறுபோக செய்கைக்காக நெடுங்கண்டல் புலவை திறந்துவிடுமாறு விவசாயிகள் சார்பாக கோரிக்கை முன்வைக்கிறோம் என்றனர்.

மேலும், இப்போராட்டத்தின்போது விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

அதிகாரிகளின் பழிவாங்கலை எதிர்த்து மன்னாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

அதிகாரிகளின் பழிவாங்கலை எதிர்த்து மன்னாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
அதிகாரிகளின் பழிவாங்கலை எதிர்த்து மன்னாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
அதிகாரிகளின் பழிவாங்கலை எதிர்த்து மன்னாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
அதிகாரிகளின் பழிவாங்கலை எதிர்த்து மன்னாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More