அசையும் மற்றும் அசையா சொத்துகள் விபரங்களைச் சேகரிக்கும் இறைவரி திணைக்களம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அசையும் மற்றும் அசையா சொத்துகள் விபரங்களைச் சேகரிக்கும் இறைவரி திணைக்களம்

அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விபரங்கள் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்கு வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளபோதிலும், அது புதிய சட்டங்களைத் திணிக்கும் ஒரு வர்த்தமானி அல்ல. இது வருமான வரிச் சட்டத்தின் 128(8) அத்தியாயத்துக்கு அமைய மூன்றாம் தரப்பினரின் மூலம் இறைவரித் திணைக்களத்துக்கு தகவல் பெறுவதற்கான உரிமை நடைமுறைப்படுத்தல் மட்டுமே என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய வலியுறுத்தினார்.

அத்துடன், கடந்த காலத்தை பாதிக்கும் வகையில் இந்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது.

செயலற்ற நிலையில் இருந்த சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவதே இந்த சுற்றறிக்கை. இதன்படி கடந்த மார்ச் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கான அறிவிப்பு மே 21 ஆம் திகதி உள்நாட்டு இறைவரி ஆணையாளரால் வெளியிடப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அசையும் மற்றும் அசையா சொத்துகள் விபரங்களைச் சேகரிக்கும் இறைவரி திணைக்களம்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)