12 நீச்சல் வீரர்கள், வீராங்கனைகள் சாதனை

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

12 நீச்சல் வீரர்கள், வீராங்கனைகள் சாதனை

12 நீச்சல் வீரர்கள், வீராங்கனைகள் சாதனை

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை - பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர்கள், வீராங்கனைகள் அஞ்சல் ஓட்டமுறையில் நீந்திச் சாதனை படைத்தனர்.

மகாராஸ்ட்ரா மாநிலம், தானே பகுதியில் செயல்பட்டு வரும் ராம் சேது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையை சோந்நத மகராஸ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த 12 நீச்சல் வீராங்கனைகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையுள்ள சுமார் 30 கிலோ மீற்றர் தொலைவிலான பாக்ஜலசந்தி கடற்பரப்பை நீந்திக் கடப்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை, இலங்கைத் தூதரகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பனவற்றின் அனுமதியைக் கோரினர்.

இந்திய - இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து இரண்டு படகுகளில் தங்கள் நீச்சல் பயிற்சியாளர் தலைமையில் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் இலங்கை தலைமன்னார் சென்றனர்.

தலைமன்னாரிலிருந்து காலை 6. 30 மணிக்கு கடலில் குதித்து நீந்தத் தொடங்கிய 12 பேரும் மாலை 4. 40 மணியளவில் (10 மணி நேரம் 20 நிமிடங்களில் நீந்தி) தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை வந்தடைந்தனர். நீந்தி சாதனை படைத்தவர்களை சுங்கத்துறை, மரைன் பொலிஸார், சுற்றுலாப்பயணிகள் அரிச்சல்முனையில் வரவேற்றனர்.

12 நீச்சல் வீரர்கள், வீராங்கனைகள் சாதனை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)