வியாபாரமாக்கப்பட்ட வினைத்திறன்காண் தடைப்பரீட்சை தொழிற்சங்கம் கவலை

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வியாபாரமாக்கப்பட்ட வினைத்திறன்காண் தடைப்பரீட்சை தொழிற்சங்கம் கவலை

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைப்பரீட்சை வியாபாரமாக்கப்பட்ட நிலையிலுள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.

தொழில் ரீதியாக தகுதி வாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளின் தொழிற் சங்கம், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜர் ஒன்றில் மேற்கண்டவாறு கவலை தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கம் சார்பில் சங்கப் பொதுச் செயலாளர் எம்.ஹுசைன் முபாரக் இந்த மகஜரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தடை தாண்டல் பரீட்சை நடத்தப்படுவதனால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற அறிவு ரீதியான மாற்றத்தை விட வகுப்புக்களாக மாற்றப்படுவதனூடாக அவர்களின் திறமை மட்டுமன்றி, அவர்களது செயல் ரீதியான அனுபவத்தை வளர்ப்பதன் மூலம் அவர்களிடமிருந்து வினைத்திறனான சேவையை அவர்கள் சார்ந்த துறையினூடாக பெற முடியும் எனவும் மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மகஜரில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நீங்கள் இந்த நாட்டுக்கு அயராது ஆற்றிவருகின்ற சேவையானது மக்களால் என்றும் மறக்க முடியாத ஓர் உன்னத சேவையாக எங்களது தொழிற்சங்கம் கருதுகின்றது.

எமது நாட்டில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவையாற்றி வருகின்றார்கள் இருந்தாலும் அவர்களுக்கு நடாத்தப்படுகின்ற வினைத்திறன்கான் தடைதாண்டல் பரீட்சையானது தற்பொழுது வியாபாரமாக்கப்பட்டு வகுப்புக்களாக மாற்றப்பட்டு இருக்கின்றன. மேலும் வினைத்திறன் ஈபீ பரீட்சையை நோக்காகக் கொண்டு ஒரு நபரிடம் ஒரு மணித்தியாலத்திற்கு 500.00 அறவிடப்படுவது ஒரு கவலையான விடயமாகும். அது மாத்திரமன்றி ஸூம் ஊடாக நடாத்தப்படுகின்ற வகுப்புக்களுக்கு 3000.00இற்கு மேற்பட்ட கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. இது அரச ஊழியர்களை பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டமான நிலைக்குள் உள்ளாக்கியிருக்கின்றது.

ஆனால், ஆசிரியர்களுக்கு இவ்வாறான தடைதாண்டல் பரீட்சை இல்லாமலாக்கப்பட்டு சிறந்த விரிவுரையாளர்களைக் கொண்டு வகுப்புக்களாக மாற்றப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றது. இது ஒரு சிறந்த முறையாக எங்களுடைய தொழிற்சங்கம் கருதுகின்றது.

மேலும், தடை தாண்டல் பரீட்சை நடாத்தப்படுவதனால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற அறிவு ரீதியான மாற்றத்தைவிட வகுப்புக்களாக மாற்றப்படுவதனூடாக அவர்களின் திறமை மட்டுமன்றி அவர்களின் செயல் ரீதியான அனுபவத்தை வளர்ப்பதன் மூலம் அவர்களிடமிருந்து வினைத்திறனான சேவையை அவர்கள் துறையினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தங்களின் தொழிற்சங்கம் மேலான ஆலோசனையாக முன்வைக்கின்றது.

அதுமட்டுமல்லாது அண்மையில் மாற்றப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்ற சிங்கள பாடத்துக்கான செயற்பாட்டு வகுப்புக்கள் மிகவும் பிரயோசனமானதாக அமைந்து இருப்பதாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கருதுகின்றார்கள்.

ஆகவே, இவ்வாறான நடைமுறையைப் பயன்படுத்தி நாட்டில் காணப்படுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வினைத்திறன்கான் பரீட்சை மாற்றப்பட்டு பொருத்தமான நடைமுறைசார் வகுப்புக்களாக செயற்படுத்த தாங்கள் ஆவணை செய்யுமாறு எங்களின் தொழிற்சங்கம் அன்பாய் கேட்டுக்கொள்கின்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரமாக்கப்பட்ட வினைத்திறன்காண் தடைப்பரீட்சை தொழிற்சங்கம் கவலை

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)