
posted 28th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வவுனியா, மன்னாரில் காணி உறுதிகளைப் பெற்ற 700 பேர்
வவுனியா, மன்னார் மாவட்டங்களில் 700 காணி உறுதிப் பத்திரங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரியவர்களிடம் வழங்கி வைத்தார்.
நேற்று முன்தினம் (26) ஞாயிற்றுக்கிழமை வவுனியா சென்ற ஜனாதிபதி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் வைத்து இந்தக் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.
"உறுமய" வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்திலுள்ள 4 பிரதேச செயலகங்கள், மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக இந்த காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் "உறுமய" வேலைத்திட்டத்தின் கீழ் 5,400 முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)