
posted 7th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வடமாகாண அபிவிருத்திக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் நோர்வே

வடக்கு மாகாண அபிவிருத்திக்குத் தேவையான ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஆளுநரிடம் தெரிவித்தார்.
நோர்வேத் தூதுவர் மே - எலின் ஸ்டெனர், வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸை நேற்று (06) திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றங்கள், காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றல் செயல்பாடுகள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கல்வி, இயற்கை சக்தி வளங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும், சுற்றுலா வழிகாட்டிகள் போதிய எண்ணிக்கையில் இல்லை எனவும், தங்குமிட வசதிகள் போதுமான அளவு இல்லை எனவும் குறிப்பிட்ட ஆளுநர், சுற்றுலாத் துறையை மேம்படுத்த முதலீடுகள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
கற்றல் செயல்பாடுகள் மற்றும் தொழிற்கல்வியைப் பெற முடியாது போகும். இளைஞர், யுவதிகள் தொடர்பில் மாற்று வழிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
விடயங்களைக் கேட்டறிந்து கொண்ட இலங்கைக்கான நோர்வேத் தூதுவர், வடக்கு மாகாண அபிவிருத்திக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை தொடர்ச்சியாக வழங்கத் தயார் எனவும், ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)