
posted 19th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வடக்கு மாகாணத்திற்கான ஜனாதிபதியின் விஜயம் தொடர்பான கலந்துரையாடல்

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் வடக்கு மாகாணத்திற்கான விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (19/05/2024) நடைபெற்றது.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
பாதுகாப்புப் பிரிவினர், பொலிசார், மாவட்ட அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள், திட்டங்களுக்கு பொறுப்பான துறைசார் அதிகாரிகளின் கடமைகள், பாதுகாப்பு நடைமுறைகள், நிகழ்ச்சி நிரல் திட்டமிடல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)