
posted 19th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யுத்தத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
யுத்தத்தால் இறந்த அனைத்து மக்களையும் நினைவுகூரும் நிகழ்வு
கிளிநொச்சி மாவட்ட மக்கள் சமூக நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று (18) சனிக்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், அனைத்து இனத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.
நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த அத்தனை உறவுகளையும் நினைவேந்தி அஞ்சலிக்கப்பட்டதுடன், சர்வமத பிரார்த்தனையும் இடம்பெற்றது.
Galleryயில் உள்ள படங்களைக் கிளிக் செய்து பெரிதாகப் பாருங்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)