
posted 10th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் பத்திரகாளி கோவில் அருகாமையில் உள்ள வீட்டில் கஞ்சா செடியை வளர்த்த நபரொருவர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விசாந்த தமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குகிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
8 அடி 700 cm நீளமான கஞ்சா செடியினை வளர்த்த 46 வயதான வீட்டின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)