
posted 15th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவாக யாழ் பல்கலைக்கழகத்தில் இரத்தானம்
கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு நேற்று (14) செவ்வாய்க்கிழமை காலை முதல் இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் கட்டடத் தொகுதியில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் குருதிக்கொடை வழங்கிய நிலையில், பொதுமக்களும் இதில் பங்கேற்றனர்.
அதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழக மாணவர்களும் குருதிக் கொடையில் உணர்வுடன் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)