
posted 19th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; வர்த்தக நிலையங்கள் நேற்று பூட்டு
முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுக்கு கிளிநொச்சி வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்த்த ஏனைய வர்த்தக நிலையங்கள் நேற்று சனிக்கிழமை மூடப்பட்டன.
பொதுச்சந்தை உள்ளிட்ட அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)