
posted 27th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
முத்துநகர் மக்கள் வெளியேற உத்தரவு - தீர்வு நடவடிக்கையில் இம்ரான் எம். பி.
முத்துநகரிலிருந்து மக்களை வெளியேறுமாறு துறைமுக அபிவிருத்தி சபை உத்தரவிட்டமை தொடர்பில் இம்ரான் மஹரூப் எம். பி. கவனம் செலுத்தியுள்ளார்.
திருகோணமலை முத்து நகரில் பல தசாப்த ஆண்டுகளாக மக்கள் குடியிருக்கின்றனர். இந்தப் பகுதியிலிருந்து மக்களை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மக்களிடையே குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் எம். பி. அந்த நகருக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடினார்.
வெளியேறப் பணிக்கப்பட்ட காணிகளில் மக்கள் விவசாய செய்கையை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், 1984 ஆம் ஆண்டு வர்த்தமானி மூலம் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமானவை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனாலேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணும் நோக்கில் அமைச்சு மற்றும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடப்படும் என்று இம்ரான் எம். பி. தெரிவித்தார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)